2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘ஜனாதிபதியின் செயல்பாடுகள் வரவேற்கத்தக்கன’

Editorial   / 2020 ஜனவரி 12 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், ஏ.ஆர்.எம்.றிபாஸ்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் செயற்பாடுகள் அனைத்தும் வரவேற்கத்தக்கனவாக இருப்பதாக, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா  மஃறூப் தெரிவித்தார்.

கிண்ணியாவில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு, உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஜனாதிபதி,  நேரடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்று, அங்குள்ள மக்களின் குறைபாடுகளைக் கேட்டறிந்து கொண்டார். அதுபோன்று பல இடங்களுக்கும் சென்று வருகிறார்.

“இவை, வரவேற்கத்தக்கன. ஆனால், அவருடைய தேர்தல் தொடர்பான விஞ்ஞாபனத்தின் அறிக்கைக்கும், தற்பொழுது இருக்கின்ற  சில அமைச்சர்களின் நடவடிக்கைக்கும் எந்தத் தொடர்புகளும் இல்லாமல் இருக்கின்றது” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .