2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

டெங்கு அபாயத்தை கட்டுப்படுத்தும் திட்டம் ஆரம்பம்

Editorial   / 2020 ஜூன் 02 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை, கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், டெங்கு நுளம்புகளைக் கட்டுப்படுத்தும் விசேட திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்படி, கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எம்.எம்.அஜீத்தின் தலைமையில், டெங்கு குடம்பி பரவும் இடங்கள் வீடு வீடாகச் சென்று இன்று (02) சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார், இராணுவத்தினர் இணைந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை, டெங்கு நுளம்பு பரவாத வகையில் தங்களது வீட்டுச் சுற்றுப் புறச் சூழல்களை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பொதுமக்களை எச்சரிக்கை விடுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .