2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

டெங்கு அபாயம்; பிரத்தியேக வகுப்புகள் இடைநிறுத்தம்

Editorial   / 2019 டிசெம்பர் 19 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை நகராட்சிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வேகமாகப் பரவி வரும் டெங்குத் தொற்றின் காரணமாக, மாணவர்களின் பாதுகாப்புக் கருதி, பிரத்தியேக வகுப்புக்கள் யாவும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இம்மாதம் 18ஆம் திகதி  முதல் 2020 ஜனவரி 01ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவேண்டுமென, திருகோணமலை நகர சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதியில், இவ்வறிவித்தலை மீறி நடத்தப்படும் பிரத்தியேக வகுப்புக்குரிய நிர்வாகிகளுக்கு எதிராக பொலிஸாரால் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

மாவணவர்களுடைய கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே, தற்காலிகமாக வகுப்புக்கள் இடைநிறுத்தப்படும் காலம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் இப்பகுதியில் பிரத்தியேக வகுப்புக்கள் நடத்தப்படுகின்ற கட்டடங்கள் நல்ல நிலையில் இல்லாததால், மாணவர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக, பெற்றோர் மூலம் அறியக்கிடைத்திருப்பதாகவும் திருகோணமலை நகர சபை தெரிவித்தது.

இவ்வாறான பிரத்தியேக வகுப்புக்களுக்கு எதிராகவும் நகரசபையில் பதிவு செய்து அனுமதிப்பத்திரம் பெறாத தனியார் கல்வி நிறுவனங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் திருகோணமலை நகர சபையால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .