2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘டெங்கு பரிசேதனை மேற்கொள்ளவும்’

ஒலுமுதீன் கியாஸ்   / 2018 டிசெம்பர் 05 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளி இடங்களில் தங்கியிருந்து வருகின்றவர்கள், தங்களுக்குக் காய்ச்சல் ஏற்பட்டால், டெங்கு நோய் இல்லை என்று அடையாளம் காணும் வரை வைத்தியசாலைக்குச் சென்று, மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென, கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஏ.எம்.அஜீத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

இவ்வருடத்தில், கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு நுளம்பின் தாக்கம் குறித்து, நேற்று (4) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இது குறித்து தொடர்ந்துரையாற்றிய அவர், இவ்வாண்டு ஜனவரி மாதம் தொடக்கம் நவம்பர் 30ஆம் திகதி வரையுமான காலப் பகுதிக்குள், கிண்ணியா பிரதேசத்தில், 27 டெங்கு நோயாளர்கள் இனங்காண ப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.  

இவர்களில் 2 பேர் மாத்திரமே, கிண்ணியா பிரதேசத்தில் இருந்து டெங்குக் காய்ச்சலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்றும் ஏனைய 25 பேரும், கொழும்பு, மட்டக்களப்பு, கண்டி போன்ற வெளியிடங்களுக்குத் தொழில் நிமிர்த்தமோ அல்லது கல்வி கற்கும் பொருட்டோ சென்று வந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.  

எனவே, இவ்வாறு வெளி மாவட்டடங்களில் தங்கியிருந்து வருகின்றவர்கள், தங்களுக்குக் காய்ச்சல் ஏற்பட்டால், டெங்குத் தொற்று குறித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென, அவர் வேண்டுகோள் விடுத்தார்.  

இதேவேளை, கிண்ணியாவை டெங்கு அற்ற பிரதேசமாக மாற்றுவதற்கு, பல்வேறு நடவடிக்கைகளைத் தாம் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .