2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

டைனமேட் வெடிபொருட்களுடன் இருவர் கைது; எண்மர் தப்பியோட்டம்

Editorial   / 2019 பெப்ரவரி 10 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன்  கியாஸ், தீஷான் அஹமட், அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக், ஏ.எம்.ஏ.பரீத், ஏ.ஆர்.எம்.றிபாஸ்


திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்கட்டி கடற்பகுதியில், சிலர் டைனமேட்டைப் பயன்படுத்தி, சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு, அவற்றைக் கடற்கரைக்குக் கொண்டு வந்தபோது, சம்பூர் பொலிஸாரால் நேற்று (09) சுற்றிவளைப்​பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, மீன்பிடியில் ஈடுபட்ட 8 பேர் தப்பித்துச் சென்றுள்ளனர் எனவும் படகு 01, என்ஜின் 01, கெப் ரக வாகனம் 1, மீன்கள் 262 கிலோகிராம், டைனமேட் கூர் 18, டெக்னைட்டர் 07 ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.  

அத்தோடு, கெப் வாகனத்தில் மீனை ஏற்றுவதற்குச் சாரதியாக வந்த 24 வயது இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளாரெனவும் தப்பித்துச் சென்ற 08 சந்தேகநபர்களையும் கைதுசெய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பெரியாட்டுமுனை பிரதேசத்தில் 7 கிலோ 250 கிராம் டைனமேட் வெடிபொருட்களுடன் 36  வயது நபரொருவர், நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து 50 அடி நீளமான டைனமேட் எரிபொருளுக்குப் பயன்படுத்தப்படும் நூலும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கைதுசெய்யப்பட்ட நபரை, கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், திருகோணமலை விசேட போதைப்பொருள் ஒழிப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை, சம்பூர் பொலிஸாரும் கிண்ணியா பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X