2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தகவல் அறியும் சட்டம் தொடர்பில் விழிப்புணர்வு

Editorial   / 2020 பெப்ரவரி 13 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம், அப்துல்சலாம் யாசீம், ஹஸ்பர் ஏ ஹலீம்

தகவலறியும் சட்ட நடவடிக்கைள் ஊடக பொதுமக்களுக்கு அரச, பொது நிறுவனங்கள் வழங்கிய வருடாந்த சேவைகள் தொடர்பான அறிக்கைகளை,  ஆணைக்குழுவுக்கு அறிக்கையாகச் சமரப்பிக்கப்படவேண்டுமெனவும் அதனைக் கண்கானிக்க வேண்டிய, ஆராயவேண்டிய கடப்பாடு ஆணைக்குழுவுக்குள்ளதாகவும், தகவலறியும் ஆணைக்குளுவின் தலைவர் மகிந்த கம்மம்பல  தெரிவித்தார்.

துரதிர்ஷ்டவசமாக பல நிறுவனங்களிடமிருந்து அவ்வறிக்கைகள் கிடைக்கப்பெறவில்லை என, தகவலறியும் ஆணைக்குழுவின் தலைவர்  மேலும் தெரிவித்தார்

இது தொடர்பாக திருகோணமலை மாவட்டச் செயலகத்தில், இன்று (13) நடைபெற்ற விழிப்புணர்வுக் கூட்டத்திலேயே  மேற்படி விடயத்தைச் சுட்டிக்காட்டினார்.

திருகோணமலை மாவட்டச் செயலகத்தில், மேலதிக மாவட்ட அரச அதிபர் (காணி) அனஸ் தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்.

இங்கு ஆணையாளர்களான கிஸாலிபின்ரோ ஜயவர்த்தன, நீதிபதி பி.ஆர்.வெல்கம உள்ளிட்டபலரும் கலந்துகொண்டு, விளக்கமளித்தனர்

இங்கு கிழக்கு மாகாண  சபையின் பலதுறைசார் செயலாளர்கள், திட்டமிடல் அதிகாரிகள், மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலக  செயலாளர்கள், துறைசார் தகவலுக்குப் பொறுப்பான அதிகாரிகள், சிவில் அமைப்பு பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .