2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தனியார் வகுப்புகளுக்கான இகைக்காலத் தடையை மீறினால், சட்ட நடவடிக்கை

Editorial   / 2018 டிசெம்பர் 01 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

தனியார் வகுப்புகளுக்கு இடைக் கால தடை உத்தரவு விடுவிக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் நேற்று (30) ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இன்றிலிருந்து அனைத்து பாடசாலைகளுக்கும், மூன்றாம் தவணைக்கான விடுமுறை வழங்கப்பட்டுள்ளன. எனவே மாணவர்களின் நலன் கருதி அவர்களின் விடுமுறை காலத்தினை மகிழ்ச்சியாக வீடுகளில் கழிக்க வேண்டும் என்பதால், தயவு செய்து கிண்ணியா நகர சபைக்குட்பட்ட அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் இரண்டு வாரங்கள் கழித்து அதாவது டிசெம்பர் (15)ஆம் திகதிக்கு பிறகு பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பம் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இன்றிலிருந்து 15 ஆம் திகதிக்குள் தனியார் வகுப்புகளை நடத்துவதாக முறைப்பாடுகள் நகர சபைக்கு கிடைக்கும் பட்சத்தில், அந்த தனியார் கல்வி நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .