2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தரம் 05 பெறுபேற்றை அதிகரித்தல்

Editorial   / 2018 டிசெம்பர் 19 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஆர்.எம்.றிபாஸ்

கிண்ணியா வலயத்துக்குட்பட்ட குறிஞ்சாக்கேணி கோட்ட பாடசாலைகளின் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றை அதிகரிப்பது தொடர்பான கூட்டம், கிண்ணியா பிரதேச சபை நடுத்தீவு விருந்தினர் விடுதியில், தவிசாளர் எம்.எச்.எம்.சனூஸ் ஏற்பாட்டில் இன்று (19) நடைபெற்றது.

2019ஆம் ஆண்டு,  தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில், குறிஞ்சாக்கேணி கோட்டத்தில், அதிகளவான மாணவர்களை சித்தியடையச் செய்வதற்கு எவ்வாறான முன்னெடுப்புகள் செய்ய வேண்டுமென, இங்கு கலந்தாலோசிக்கப்பட்டன.

எதிர்காலத்தில்  முன்மாதிரியான வலயக் கல்வியாக, குறிஞ்சாக்கேணியை  மாற்றுவதே இதன் நோக்கமென, கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .