2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘தலைவர் இன்மையால் சில திட்டங்கள் பின்னடைவு’

Editorial   / 2020 ஜனவரி 02 , பி.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை மாவட்டத்துக்கான ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஒருவர் இல்லாமையால், அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தில் உள்ள ஏனைய பிரச்சினைகளுக்கான தீர்வின்மை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அபிவிருத்திக் குழுத் தலைவர்கள், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர்.

எனினும், திருகோணமலை மாவட்டத்துக்கான அபிவிருத்திக் குழுத் தலைவர் இதுவரை நியமிக்கப்படவில்லை.

இதனால் மாவட்ட செயலகத்தில் நடைபெற்று வருகின்ற மாவட்ட  ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இரு மாதங்கள் கடந்தும் நடைபெறாமை குறித்து பல்வேறு இடர்பாடுகளை மாவட்ட மக்கள் முகங்கொடுக்கவேண்டி ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரச அதிகாரிகள் மூலமாக முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள், அதனை நடை முறைப்படுத்துவது உள்ளிட்ட பல விடயங்களைத் திறம்பட முன்னெடுத்துச் செல்வதாக இருந்தால் இது விடயத்தைக் கவனத்திற்கொண்டு, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் நியமிக்கப்பட வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .