2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தேங்காய் இல்லாமையால் அவதி

அப்துல்சலாம் யாசீம்   / 2018 பெப்ரவரி 18 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, மொறவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  பகுதிகளிலுள்ள சில்லறைக்கடைகளில் தேங்காய்  விற்பனைக்கு இல்லாமையால் பொதுமக்கள் மிகவும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கின்றனர்.

தென்னை மரங்களில் ஒரு வகையான நோய் ஏற்படுவதால் தேங்காய்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

மொறவெவ பிரதேசத்திலுள்ள ரொட்டவெவ  மஹதிவுல்வெவ மற்றும் தெவனிபியவர பகுதிகளிலுள்ள தென்னை மரங்களிலும் ஒரு வகையான நோய் பரவுவதால், அந்நோயை இல்லாதொழிக்க, தென்னை அபிவிருத்தித் திணைக்களம் கூடிய கவனம் எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அத்துடன், எதிர்காலத்தில் தென்னைக்  கன்றுகளை வீடுகளில் நாட்டி, தேங்காய் பற்றாக்குறையை நிவர்த்திக்க மக்களுக்கு அறிவூட்டல்களை வழங்க வேண்டுமென, பிரதேச புத்திஜீவிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .