2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தேசிய கட்டட ஒப்பந்தக்காரர்களின் சங்கம் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு

பொன் ஆனந்தம்   / 2018 டிசெம்பர் 23 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய கட்டட ஒப்பந்தக்காரர்களின் சங்கம், திருகோணமலை மாவட்ட ஒப்பந்தகாரர்களைப் புறக்கணிப்பாதாக, திருகோணமலை கட்டட ஒப்பந்தகாரர் சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் செல்வராசா ஜெகதீசன் குற்றஞ்சாட்டினார். 

திருகோணமலை மாவட்ட ஒப்பந்தக்காரர்களின் வருடாந்த ஒன்றுகூடல், உப்புவெளி, ஜேக்கப்பார்க் விடுதியில், நேற்று (22) இரவு நடைபெற்ற போதே, மேற்கண்ட குற்றச்சாட்டை அவர் முன்வைத்தார்.  

அங்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில், தாம் 25 வருடங்களாக தேசிய ஒப்பந்தகாரர்கள் சங்கத்தின் வழிநடத்தலில், அதன் திருகோணமலைக் கிளையாகச் செயற்பட்டு வந்தாகவும் ஆனாலும், இந்த வருடத்தில், திருகோணமலைக் கிளைச்சங்கத்தின் பொதுக்கூட்டம், முறையாக இன்னும் நடத்தப்படவி
ல்லையெனத் தெரிவித்தார். 

இது, இவ்வருட நிர்வாகத்தின் முறையற்ற செயலால் இடம்பெற்ற விடயமாகுமெனக் குறிய அவர், இதனாலேயே, இன்றைய தினம் (நேற்று முன்தினம்) திருகோணமலை மாவட்ட ஒப்பந்தக்காரர்களின் ஒன்றுகூடலை முதன்முறையாகத் தனியாக நடத்தவேண்டி ஏற்றப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். 

தேசிய ஒப்பந்தகாரர்களின் சங்கம், தமது மாவட்ட ஒப்பந்தக்காரர்களைப் புறக்கணிப்பதால், இவ்வாறானதொரு முடிவை எடுக்க நேரிட்டதாகவும் தமது அதிருப்தியை, தேசிய சங்கத்துக்குத் தெரியப்படுத்தும் வகையில், இந்த ஒன்றுகூடல் நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.  

தொடர்ந்தும் தேசிய சங்கம், தம்மைப் புறக்கணிக்குமாக இருந்தால், தாம் தனியாக இயங்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .