2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தொண்டராசிரியர் பிரச்சினைக்கு புதிய அமைச்சரவை பத்திரம்

அப்துல்சலாம் யாசீம்   / 2018 ஜூலை 14 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதிக்கப்பட்ட தொண்டராசிரியர்களுக்குறிய நியமனம் வழங்கப்பட வேண்டுமென கிழக்கு மாகாண ஆளுநர் கூறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் தெரிவித்தார்.  

பாதிக்கப்பட்டவர்களுக்குறிய தனியான அமைச்சரவை பத்திரமொன்றினை உடனடியாக சமர்ப்பித்து அனுமதியை பெற்று வந்தால் மிக விரைவில் நியமனங்களை வழங்க முடியுமென தெரிவித்த ஆளுநர் கிழக்கு மாகாணத்தில் அதிகளவிலாள தொழில் வாய்ப்புக்களை வழங்குவதையே தான் விரும்புவதாகவும் சுட்டிக்காட்டினார்.

கிழக்கு மாகாண, தொண்டராசிரியர்களின் பிரச்சினைகள், அவர்களுக்கான நியமனம் வழங்குதல் என்பவை தொடர்பில், ஆளுநர் ரோஹித போகொல்லாகம, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தொண்டராசிரியர்களுக் இடையில் நேற்று (13)  சந்திப்பொன்று ஆளுநர் செயலகத்தில் நடை பெற்றது.

அச்சந்திப்பின் போதே கிழக்கு மாகாண ஆளுநர் இதனை தெரிவித்தார்.

அத்துடன், கிழக்கு மாகாணத்தில் யுத்த காலங்களில் கடமையாற்றிய தொண்டராசிரியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .