2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தோப்பூரில் இந்தியப் பிரஜை கைது

தீஷான் அஹமட்   / 2018 மார்ச் 18 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து, தோப்பூர் பகுதியில் அரச விதிமுறைகளை மீறி, புடவை வியாபாரத்தில் ஈடுபட்டக் குற்றச்சாட்டில், இந்திய பிரஜை ஒருவர், நேற்று  (17) மாலை தோப்பூரில் வைத்து செய்யப்பட்டுள்ளதாக, மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நந்தலால் பத்மநாத தெரிவித்தார்.

38 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொறுப்பதிகாரி,

குறித்த நபரிடமிருந்து, விற்பனை செய்வதற்காக வைத்திருந்த சல்வார், சாரி, சல்வார் துணி உள்ளிட்ட துணிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட நபர் மூதூர் பொலிஸில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், இவரை மூதூர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .