2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

நியமனங்கள் வழங்காமை குறித்து எதிர்கட்சித் தலைவரிடம் முறைப்பாடு

வடமலை ராஜ்குமார்   / 2018 டிசெம்பர் 11 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நியமனங்கள் வழங்கப்படாமை குறித்து, எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் எழுத்து மூலமாக  முறையிடப்பட்டுள்ளது.

 

மேற்படி வெற்றிடங்களை நிரப்புவதற்கான போட்டிப் பரீட்சை நடத்தி, நேர்முகத் தேர்வு நடத்திய பின்னரும் நியமனங்கள் வழங்கப்படாமையால், பாதிக்கப்பட்ட பரீட்சாத்திகள் இது தொடர்பில் முறையிட்டுள்ளனர்.

இவற்றுக்கான பரீட்சைப் பெறுபேறுகளை, மாகாணப் பொதுச் சேவை ஆணைக்குழு, கடந்த 2 மாதங்களுக்கு முன்பே வெளியிட்டிருந்ததாகச் சுட்டிக்காட்டிய பரீட்சார்த்திகள், நேர்முகப் பரீட்சை நடத்தபட்டு ஒன்றரை மாதங்களாகியும் இதுவரை இந்நியமனங்கள் வழங்கப்படாதுள்ளதாகத் தெரிவித்தனர்.

நாட்டில் தற்போது பல மாவட்டங்களிலும் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்ற போதும், கிழக்கு மகாண சுகாதார அமைச்சில் நியமனங்கள் வழங்காது இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருவதாக பரீட்சாத்திகள், தமது முறைப்பாட்டில் ​மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .