2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நுழைவாயிலை மறைத்துப் போராட்டம்

அப்துல்சலாம் யாசீம்   / 2018 ஜூலை 18 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட 456 பேருக்கும் நிரந்தர நியமனத்தை உடனடியாக வழங்குமாறு கோரி, மூன்றாவது நாளாகவும் ஆளுநர் அலுவலகத்தின் பிரதான நுழைவாயிலை மறைத்து, தொண்டராசிரியர்கள் இன்று (18) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்கு மாகாணக் கல்வியமைச்சால், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் நேர்முகப்பரீட்சை நடத்தப்பட்டுத் தெரிவுசெய்யப்பட்ட தொண்டராசிரியர்களின் பெயர்கள், உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தும், இதுவரை காலமும் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லையென, போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் (16) ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டமானது, தெரிவுசெய்யப்பட்ட தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் வரை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென, தெரிவுசெய்யப்பட்ட தொண்டராசிரியர்கள் தெரிவித்தனர்.
இவ்வார்ப்பாட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட தெரிவுசெய்யப்பட்ட தொண்டராசிரியர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .