2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘பல்கலைக்கழக விண்ணப்ப கால எல்லையை நீட்டிக்கவும்’

Editorial   / 2020 மே 29 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக்,  ஹஸ்பர் ஏ ஹலீம்

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப கால எல்லையை நீட்டிக்குமாறு, திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கல்வி அமைச்சின் முன்னாள்   கண்காணிப்பு உறுப்பினருமாகிய  இம்ரான் மகரூப் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஜனாதிபதி, பிரதமர், கல்வி அமைச்சர், உயர் கல்வி அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலயே, கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்தக் கடித்ததில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “2019 க.பொ.த உயர்தரத்தில் சித்திபெற்று,  பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களின் விண்ணப்ப படிவத்தை, பாடசாலை ஆரம்பித்து இரு வாரங்களின் பின்னர் சமர்ப்பித்தல் போதுமானதென முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

“எனினும், தற்போது ஜூன் 2ஆம் திகதிக்கு முன்னர் குறித்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டுமென, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவொரு முரணான விடயமாகும்.

“இந்த முரண்பட்டால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்பு உள்ளது. இந்த அரசாங்கத்தின் கல்வி சார்ந்த நிலையற்ற ஒரு கொள்கையை இது சுட்டிக் காட்டுகின்றது.

“தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையின் காரணமாக, மாணவர்களுக்கு இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படலாம்.  

“பாடசாலைகள் எப்போது ஆரம்பிக்கப்பட போகின்றது என்று தெரியாத ஒரு சூழ்நிலையில், அதிபர், ஆசிரியர்களுடைய ஆலோசனைகளைக் கூட பெற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலை மாணவர்களுக்கு ஏற்படலாம்.

“இவற்றைக் கருத்தில்கொண்டு, பல்கலைக்கழக அனுமதிக்கான கால எல்லையை  நீட்டிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X