2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பஸ்களிடையே போட்டி ; அச்சத்தில் பயணிகள்

வடமலை ராஜ்குமார்   / 2017 டிசெம்பர் 06 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதிகளில் செல்லும் தனியார், அரச பஸ்களின் போட்டி காரணமாக, அதிக வேகத்தால், வீதிச் சமிக்ஞைகளைக்   கடைப்பிடிக்காத சாரதிகளால் பயணிகள் விபத்து அபாயத்தை எதிர்நோக்குவதாக அச்சம் தெரிவிக்கின்றனர்.

 

இவ்வீதிகளில் தனியார் மற்றும் அரச பஸ்கள் சில நிமிடங்கள் வித்தியாசத்திலேயே பஸ் நிலையங்களில் இருந்து புறப்படுகிறது. எனவே, பயணிகளை அதிகமாக ஏற்றுபவர்கள் யார் என்ற போட்டியில் சாரதிகள் செலுத்துவனால், அவ்வீதிகளில் பயணிக்கும் பயணிகள் விபத்துகளுக்கு ஆளாகி மரணத்தைத் தழுவுகின்றனர்.

இவ்வாறு சராசரியாக நாள் ஒன்றுக்கு மூன்றுக்கு அதிகமான விபத்துகள் திருகோணமலை மாவட்டத்தினுள் மாத்திரம் இடம்பெறுவதாகவும் இவர்கள் சிகிச்சைக்காக திருகோணமலை மூதூர், கிண்ணியா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றார்கள் எனவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான விபத்துகள் அதிகமாக கிண்ணியா - மூதூர் பிரதான வீதிகளிலேயே இடம்பெறுகின்றது. இப்பகுதிகளில் அதிகமான மணல் ஏற்றும் டிப்பர் லொறிகள், பஸ்கள், முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியனவே, இவ்வாறு அதிகமாக விபத்துகளுக்கு முகங்கொடுப்பதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான இடங்களில் போக்குவரத்து பொலிஸாரின் கடமைகள் மிகவும் குறைவாகவே இருப்பதும் இவ்விபத்துக்களுக்கான காரணமாக அமைகிறது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .