2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

புற்றுநோய்க்கான சிகிச்சைப் பிரிவு ஆரம்பம்

அப்துல்சலாம் யாசீம்   / 2018 ஜூலை 09 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை பொது வைத்தியசாலையின் புற்றுநோய்ச் சிகிச்சைப் பிரிவு, வைத்திய கலாநிதி டொக்டர் கனேகபாகுவால், இன்று (09) திறந்து வைக்கப்பட்டது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள், அநுராதபுரத்துக்கும், கொழும்பு, மஹரகமவுக்கும் சென்று, சிகிச்சைகளைப் பெற்று வந்தனர்.

எனவே, மாவட்ட நோயாளர்களின் நலன்கருதி, 72 இலட்சம் ரூபாய் செலவில் திறந்து வைக்கப்பட்ட இப்பிரிவு, புற்றுநோயாளர்களுக்கு வழங்கப்படுகின்ற மருந்து வகைகளைக் கலக்குவதற்கும், தூர இடங்களிலிருந்து வரும் நோயாளர்களின் நலன் கருதியும் உடனே மருந்துகளைக் கலக்கி, நோயாளர்களுக்கு வழங்கும் நோக்கிலும் உருவாக்கப்பட்டதெனவும், டொக்டர் கனேகபாகு குறிப்பிட்டார்.

இப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டமையால், மிகக் குறுகிய காலத்துக்குள் மருந்துகளைக் கொடுத்து, நோயாளர்களை வீடுகளுக்கு அனுப்ப முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் புற்றுநோய்ச் சிகிச்சைப் பிரிவின் வைத்திய கலாநிதி என்.ஜெயக்குமார், திருகோணமலை பொது வைத்தியசாலை புற்றுநோய்ச் சிகிச்சைப் பிரிவின் வைத்திய நிபுணர் எப்.சசிகலா ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .