2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

புல்மோட்டை முஸ்லிம்களின் காணிகளை பகுதியளவில் விடுவிக்க இணக்கம்

Editorial   / 2018 ஒக்டோபர் 13 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக், தீஷான் அஹமட்

யுத்த காலத்தில், தமது வாழ்விடங்களையும் விவசாயக் காணிகளையும் இழந்த திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி மற்றும் சேருவில பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பொதுமக்களின் காணிகளை, உரிமையாளர்களிடம் மீளக் கையளிப்பதிலும் அம்மக்கள் பயிர்ச்செய்கை மேற்கொண்ட காணிகளை விடுவிப்பதிலும், இதுவரை காலமாக இழுபறி நிலையிருந்தது.

இதற்கு நிரந்தரத் தீர்வை எட்டும் விதத்தில், அமைச்சர் ரவூப் ஹக்கீமின் ஏற்பாட்டில், காணி அமைச்சர் கயந்த கருணாதிலக்க மற்றும் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில், இணக்கம் காணப்பட்டது.

அத்துடன், மேலதிகக் காணிகளையும் விவசாய நிலங்களையும் விடுவிப்பது தொடர்பில், வனபரிபாலன திணைக்களத்துடனான பேச்சுவார்த்தைகளின் பின்னர் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுமென, இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

மேலும், காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, உரிய முறையில் காணிகளைப் பகிர்ந்தளிப்பது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும், அமைச்சரால் ​மாவட்டச் செயலாளருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டது.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தின் காணிப் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள செயலணிக்கும் மாகாண ஆளுநருக்குமிடையிலான விசேட கூட்டம், அடுத்த வாரம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .