2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பெருந்திரளான மக்கள் படையெடுப்பு: பொலிஸ், இராணுவத்தினர் குவிப்பு

Editorial   / 2019 ஜூலை 16 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல் சலாம் யாசீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ்

தமிழர்களின் மரபுரிமை பாதுகாக்கப்பட வேண்டுமென தெரிவித்து திருகோணமலையில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு வடக்கு - கிழக்கிலிருந்து பெருந்திரளான மக்கள் படையெடுத்துள்ளனர்.

கன்னியா வெந்நீரூற்று பகுதியிலுள்ள பிள்ளையார் கோவிலை உடைத்து அந்த இடத்தில் விகாரை கட்டுவதற்கு எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (செவ்வாய்க்கிழமை) கிழக்கில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில், போராட்டத்திற்கு வரும் மக்களிடம் கடும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன், குறித்த பகுதிகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக வடக்கு - கிழக்கிலிருந்து மக்கள் வருகைதந்த பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

அத்தோடு, போராட்டம் இடம்பெறும் இடத்தில் பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .