2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘பெறுபேறு விவகாரத்தில் முறையான திட்டம் இல்லை’

Princiya Dixci   / 2021 ஏப்ரல் 29 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக், ஏ.எம்.ஏ.பரீட், அப்துல்சலாம் யாசீம், தீஷான் அஹமட், ஹஸ்பர் ஏ ஹலீம்

“க.பொ.த உயர்தரப் பெறுபேறு விவகாரத்தில் அரசாங்கத்திடம் முறையான திட்டம் எதுவும் இல்லை. இதனாலேயே பெறுபேறு வெளியீட்டுக்கு வெவ்வேறு திகதிகளைக் கூறி மாணவர்களும் பெற்றோர்களும் ஏமாற்றப்படுகின்றார்கள்” என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று (29) கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:

“க.பொ.த உயர்தரப் பரீட்சை நிறைவு பெற்று 6 மாதங்கள் கடந்துள்ளன. பெறுபேறு தமிழ் - சிங்களப் புத்தாண்டுக்கு முன் வெளியிடப்படும் என முன்னர் கூறப்பட்டது. ஏப்ரல் மாதத்துக்குள் வெளியிடப்படுமென பின்னர் சொல்லப்பட்டது.

“தற்போது இன்னும் 7 நாட்களில் வெளியிடப்படுமென அதாவது மே மாதத்தில் வெளியிடப்படுமென கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அறிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“பரீட்சைப்பெறுபேற்றை வெளியிடக் கூடிய திகதியை, அதன் பணிகள் நிறைவு பெறுவதைப்பொறுத்து, பரீட்சை ஆணையாளரால் தீர்மானிக்க முடியும். அப்படி தீர்மானிக்கின்ற திகதி ஒரு திகதியாகத்தான் இருக்கமுடியும். எக்காரணம் கொண்டும் வெவ்வேறு திகதிகளாக இருக்கமுடியாது.

“ஆனால், இன்று ஒரு பரீட்சைப் பெறுபேற்றை வெளியிடும் திகதியை சரியாக சொல்ல முடியாத அளவுக்கு அரசாங்கம் முறையான திட்டம் எதுவுமில்லாமல் தடமாறி வருவதை இதன் மூலம் அவதானிக்க முடிகின்றது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .