2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘பொதுத் தேர்தலில் சிறுபான்மைச் சமூகம் பிரதமரைத் தீர்மானிக்கும்’

Editorial   / 2019 டிசெம்பர் 04 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

இனிவரும் பொதுத் தேர்தலில், பிரதமரைத் தீர்மானிக்கும் சக்தியாக சிறுபான்மை சமூகம் மாறுமென, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்.

கிண்ணியாவில் இன்று (04) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், “அதி உச்ச அதிகாரம் கொண்ட சபையாக நாடாளுமன்றம் திகழ்கிறமையாகையால், அனைத்துச் சிறுபான்மைக் கட்சிகளும் இணைந்து, பெரும்பான்மை ஆசனத்துடன், சஜித் பிரேமதாஸவைப் பிரதமராகக் கொண்டு வருவோம்” என்றார்.

19ஆவது திருத்தத்தில் ஜனாதிபதிக்கான அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளமையை உணர்ந்து, சிறுபான்மை சமூகம் 113 ஆசனங்களையாவது பெற்று, பெரும்பான்மையை நிரூபித்து, நாட்டின் அதி உச்ச அதிகாரம் கொண்ட சபையைக் கைப்பற்ற ஒன்றிணைய வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .