2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மாட்டிறைச்சிக் கடைகளை மூடுமாறு உத்தரவு

Editorial   / 2019 ஜனவரி 06 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட், எப்.முபாரக், அப்துல்சலாம் யாசீம், ஹஸ்பர் ஏ ஹலீம்

மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட 14 மாட்டிறைச்சி கடைகளையும் மறு அறிவித்தல் வரும் வரை தற்காழிகமாக மூடுமாறு, சகல கடை உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக, மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸ் தெரிவித்தார்

இவ்விடயம் தொடர்பாக மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸ் கருத்து தெரிவிக்கும் போது, “அண்மைக் காலமாக மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட தோப்பூர், மூதூர் கிழக்கு போன்ற பகுதிகளில் அதிகளவான மாடுகள் உயிரிழந்துள்ளதோடு, தொடர்ந்தும் உயிரிழந்து வருகின்றன.

“மேய்ச்சல் இல்லாமல்  மாடுகள் உயிரிழப்பதாகவும் , மாடுகளுக்கு ஒரு வகையான நோய் பரவி உயிரிழப்பதாகவும் பரவலாகக் கருத்துக்கள்  தெரிவிக்கப்படுகின்றன.

“இவ்வாறு மாடுகளின் திடீர் உயிரிழப்புக்கான காரணத்தைக் கண்டறிவதற்காக, உயிரிழந்த மாடுகளின் இரத்த மாதிரிகள், பரிசோதனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கட்டுள்ளன. அதன் தகவல்கள் வரும் வரையில், சகல மாட்டிறைச்சிக் கடைகளும் தற்காலிகமாக மூடப்படும்” என்றார்.

இதனையும் மீறிக் கடையைத் திறக்கும் உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும், கடைகளின் அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட தோப்பூர், மூதூர் கிழக்கு பகுதிகளில், ஒரு வாரத்தினுள் மாத்திரம் சுமார் 500க்கும் அதிகமான மாடுகள் உயிரிழந்துள்ளதுடன், மாட்டு உரிமையாளர்கள், பல இலட்சம் ரூபாய் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .