2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மாதிரிக் கிராமம் மக்களிடம் கையளிப்பு

Editorial   / 2019 ஜனவரி 21 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், எப்.முபாரக்

திருகோணமலை,  சேருவிலப் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட  “போசெவனகம 155” மாதிரிக் கிராமம், வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜீத் பிரேமதாசாவால், நேற்று (20) பொதுமக்களின் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டது.

இந்த மாதிரிக் கிராமத்தில்  108 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வின் ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான டொக்டர் அருண சிறிசேனவால்  வழங்கப்பட்ட  சேருவிலத் தொகுதிக்குட்பட்ட 200 வீடுகளுக்கான முதல்கட்ட காசோலையும்  அமைச்சரால் கையளிக்கப்பட்டது.

அத்தோடு, ஈச்ச நகர் மக்களுக்கு 24 வீடுகளுக்கான காசோலையும் வழங்கப்பட்டதுடன், வீடமைப்பு அதிகார சபையில் தற்காலிகமாக கடமையாற்றியோருக்கான நிரந்தர நியமனமும் வழங்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X