2024 மார்ச் 28, வியாழக்கிழமை

முன்பள்ளி பாடசாலைகளின் மாபெரும் கண்காட்சி

Editorial   / 2018 நவம்பர் 22 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஒலுமுதீன் கியாஸ், அப்துல்சலாம் யாசீம் 

கிண்ணியா, கல்வி வலயத்துக்குட்பட்ட 70 முன்பள்ளி  பாடசாலைகள் பங்குகொள்ளும் மாபெரும் கண்காட்சி, சனிக்கிழமை (24), ஞாயிற்றுக்கிழமை (25) ஆகிய இரு தினங்களில் கிண்ணியாவில் நடைபெறவுள்ளது.

“சிறார்களின் முன்பள்ளியின் அவசியம்” எனும் தொனிப்பொருளில், கிண்ணியா அல்-ஹிரா மகளிர் மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ள இக்கண்காட்சியில், பெற்றோர்கள், பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில், 2018ஆம் ஆண்டின் முன்பள்ளி மாணவர்களின் படைப்புகள், முன்பள்ளி ஆசிரியைகளின் கற்பித்தல் படிமுறைகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

மேலும், முன்பள்ளியின்  அவசியத்தை பெற்றோர்களுக்கும் பொதுமக்களுக்கும் உணர்த்தி, ஊக்கப்படுத்தும் வகையிலும் இக்கண்காட்சி அமையவுள்ளது.

கண்காட்சியின் முதல் நாள் நிகழ்வில், கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி இஸட்.எம்.எம்.நளீமும் இரண்டாம் நாள் நிகழ்வில் கிழக்கு மாகாண முன்பள்ளி பாடசாலைகள் பணியகத்தின் தவிசாளர் எம்.ஏ.அமிர்தீனும் பிரதம அதிதிகளாகக் கலந்துகொள்ளவுள்ளனரென, கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்தின் முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.என்.எம்.சமீம் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X