2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

முறுங்கைக்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது

Editorial   / 2018 செப்டெம்பர் 25 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஆர்.எம்.றிபாஸ், ஒலுமுதீன் கியாஸ்

கிண்ணியா பிரதேசத்தில்,   இம்முறை  முறுங்கைக்காயின் உற்பத்தி  அதிகரித்துள்ளதால்,  அதன்  விலையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஒரு கிலோ முறுங்கைக்காய் 150 ரூபாய் தொடக்கம் 180 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டது.  ஆனால் தற்போது மொத்த வியாபாரிகளால் ஒரு கிலோ முறுங்கைக்காயை 20 ரூபாவுக்கு கொள்வனவு செய்யயப்பட்டு, தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றது  

கிண்ணியா பிரதேசத்தில்  காக்காமுனை, குறிஞ்சாக்கேணி, பெறியாற்றுமுனை, முனைச்சேனை, கச்சக்கொடுத்தீவு, பூவரசன்தீவு மற்றும் பெரிய கிண்ணியா ஆகிய இடங்களில் அதிகளவு முறுங்கைக்காய் விளைகின்றது.

கிண்ணியாவிலிருந்து ஒரு நாளைக்கு 20 ஆயிரம் தொடக்கம் 30 ஆயிரம் கிலோ  முறுங்கைக்காய் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைத்துக்கு  ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது.

முறுங்கைக்காயின் விலையில்  ஏற்பட்டுள்ள வீழ்ச்சியினால்  விவசாயிகள்  இலாபம் ஈட்ட முடியாதிருப்பதாக கவலை  தெரிவிக்கின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .