2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மூதூர் பிரதேச சபையின் அறிவிப்பு

தீஷான் அஹமட்   / 2017 டிசெம்பர் 18 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, மூதூர் பிரதேச சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் நாளாந்தம் சேகரிக்கப்படும் கழிவுகளைத் தரம் பிரித்துப் பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள், தங்களது வீடுகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை உக்கக்கூடியவை, உக்காதவைகளாகத் தரம் பிரித்து, இரண்டு பைகளில் இட்டு, மூதூர் பிரதேச சபையின் திண்மக் கழிவு அகற்றவரும் வாகனங்களில் ஒப்படைக்க வேண்டுமென, மூதூர் பிரதேச சபையின் செயலாளர் ஏ.டபல்யு.ஹில்மி தெரிவித்தார்.

அத்தோடு, அகற்றிய மரக் கிளைகள், கட்டைகள், முற்செடி ஆகியவைகள் திண்மக்கழிவு அகற்றும் வாகனத்தில் ஏற்றுவது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.

குறிப்பு

உக்கக்கூடிய பொருட்கள் - குப்பை கூழங்கள், கடதாசி, காட்போட் பொருட்கள் ஆகியவைகளை ஒரு பையிலும்

உக்காதவை - பிளாஸ்டிக் பொருட்கள், பொலித்தீன் வகைகள், போத்தல்கள், கண்ணாடி துகல்கள்

போன்றவைகளை வெவ்வேறு பைகளில் இட்டு மூதூர் பிரதேச சபையின் திண்மக்கழிவு அகற்றும் வாகனத்தில் ஒப்படைக்குமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .