2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மூதூர் பிரதேசத்திலுள்ள தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கின

Editorial   / 2018 நவம்பர் 09 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்  

திருகோணமலை மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக, மூதூர் பிரதேசத்திலுள்ள தாழ்நிலப் பகுதிகள் நீரிழ் மூழ்கியுள்ளன.

இதனால் குடியிருப்பு, வீடுகள், வயல் நிலங்கள், வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

மூதூர் மணிக்கூட்டு கோபுரச் சந்தியில், வெள்ளிக்கிழமை (09) மூன்றாவது நாளாகவும் வெள்ள நீர் பாய்ந்துச் செல்வதனால், மூதூர்- சம்பூருக்கான போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

அத்தோடு மூதூர் கட்டைப்பரிச்சான் இரால் பாலத்தின் மீது, மூன்றடியில் வெள்ள நீர் செல்வதனால் கணேசபுரம், அம்மன் நகர் போன்ற கிராமங்களிலிருந்து கட்டைபரிச்சான் விபுலானந்த மகா வித்தியாலயத்துக்குச் செல்கின்ற 53 மாணவர்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.

இப்பாலத்தில் தற்போது, சம்பூர் கடற்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .