2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வகுப்பறைக் கட்டடம் இடிந்து விழுந்தது

Editorial   / 2018 மே 28 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக, திருகோணமலை, கிண்ணியா, குறிஞ்சாக் கேணி மகளிர் மகா வித்தியாலய கட்டடத்தின் ஒரு பகுதி, இன்று (28) காலை இடிந்து விழுந்துள்ளதென, வித்தியாலய அதிபர் எஸ்.ரீ.நஜீம் தெரிவித்தார்.

100'×30' அடி கொண்ட இக்கட்டடத்தில், 3 வகுப்பறைகள் இடம்பெற்று வந்துள்ளன.
நோன்பு விடுமுறைக்காக வித்தியாலயம் மூடப்பட்டிருந்தமையால், ஏற்படவிருந்த சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளனவெனவும் அதிபர் தெரிவித்தார்.

இக்கட்டடத்தை உடனடியாக அகற்ற வேண்டுமென, வித்தியாலயத்துக்கு விஜயம் செய்த மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.மனோகரன், இவ்வாண்டு ஜனவரி மாதம் 12ஆம் திகதி பாடசாலை சம்பவத் திரட்டுப் பதிவு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இக்கட்டடம் விழுந்தால் மாணவிகளுக்கு ஏற்படும் சேதங்கள் குறித்து, இப்பாடசாலையின் அபிவிருத்திக் குழு, இவ்வாண்டு மார்ச் மாதம் 12ஆம் திகதி கிண்ணியா வலய கல்விப் பணிப்பாளருக்கும், கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1936ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இவ்வித்தியாலயத்தில், தரம் 1 தொடக்கம் தரம் 13 வரை, 800க்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .