2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உலர் உணவு நிவாரணம்

அப்துல்சலாம் யாசீம்   / 2018 மார்ச் 15 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டத்தில் வரட்சி காரணமாக 2016/2017 பெரும்போகம்  2017 சிறுபோகம்  2017/2018 பெரும்போகம் ஆகிய மூன்று போகங்களும் தொடர்ச்சியாக நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ள முடியாமல் போன விவசாயக் குடும்பங்களுக்கு, இன்று (15)  முதல் செயற்படுத்தப்படும் வித்தில், உலர் உணவு வழங்க அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தெரிவித்தார்.

பிரதேச  செயலக ரீதியாக குடும்பங்கள் தெரிவுசெய்யும் பொறுப்பு, பிரதேச செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளதாவும்  அரச, தனியார் துறையில் தொழில் புரியும் அல்லது நிறுவனங்களில் வியாபாரம் மற்றும் சிறு கைத்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் அல்லது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய மாதமொன்றுக்கு 20,000 ரூபாய்க்கு மேல் வேறு வருமானம் பெறும் குடும்பங்கள் தவிர்ந்த, ஏனைய விவசாயக் குடும்பங்கள் இதற்காகத் தெரிவுசெய்யப்படவுள்ளன.

குறித்த சுற்று நிருபத்தின் பிரகாரம், ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் விவசாயத்தில் ஈடுபட்டு பாதிக்கப்படின் அவர்களைத் தனித் தனியாகக் கருதாது ஒரு குடும்பமாக கருத வேண்டும்.

இரண்டு அல்லது இரண்டு பேருக்குக் குறைவான குடும்பம் ஒன்றுக்கு இரண்டு கிழமைக்கு ஒரு நிவாரணம் எனும் அடிப்படையில் ரூபாய் 2,000 படி மாதம் ஒன்றுக்கு 2 தடவையும் 3 மற்றும் 3 பேருக்கு மேற்பட்ட குடும்பத்துக்கு ரூபாய் 2,500 எனும் அடிப்படையில் மாதம் ஒன்றுக்கு 2 தடவைகள் நிவாரணம் வழங்கப்படல் வேண்டும்.

நிவாரணத்திற்காக தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களை மாதம் ஒன்றிற்கு 5 நாட்கள் பொது சிரமதான பணியில் ஈடுபடுத்தி, அப்பிரதேச அபிவிருத்திக்கு உத வேண்டும் என்றும் சிரமதான பணியின் போது விசேட தேவையுடையோர் 60 வயதுக்கு மேற்பட்ட வயோதிபர்கள், நோயால் பாதிக்ப்பட்டவர்கள், மாதாந்தம் சிகிச்சை பெறுவோர், 16 வயதுகடகு குறைந்த பிள்ளைகள் உள்ள விதவைகள் ஆகியோரை தவிர்க்க வேண்டும் என்றும் சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக, மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

சேருவில  பிரதேச செயலகத்தில் 524 குடும்பங்களும்  கிண்ணியா பிரதேச செயலகத்தில் 193 குடும்பங்களும், கோமரங்கடவெல பிரதேச செயலகத்தில் 30 குடும்பங்களும்,  வெருகல் பிரதேச செயலகத்திலிருந்து 758  குடும்பங்களின் பெயர் விவரங்கள் இத்திட்டத்தின் கீழ் உள்ளடங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .