2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

விசேட சந்திப்பு

Editorial   / 2018 ஜனவரி 19 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

 

கனேடிய தூதுவருக்கும் திருகோணமலை மாவட்ட முஸ்லிம் சமூக சிவில் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு, இலங்கைக்கான கனேடிய தூதுவர் டேவிட் மெக்கினன், திருகோணமலைக்கு நேற்று (18) விஐயம் செய்தார்.

திருகோணமலை மாவட்ட முஸ்லிம்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு வகையான பிரச்சினைகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மேலும் நிர்வாக ரீதியாக எதிர்கொள்ளும் பிரச்சினைகள், வன பரிபாலன திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், கரையோர பாதுகாப்புத் திணைக்களம் என்பவற்றின் பிரச்சினைகள், மொழிப்பிரயோக பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

இதில் கிண்ணியா ஜம்மியத்துல் உலமா சபை மற்றும் ஷூறா சபைத் தலைவர் ஏ.எம்.ஹிதாயதுல்லாஹ் நளீமி, செயலாளர் எம்.எஸ்.எம்.நியாஸ், ஆதம்பாவா தெளபீக், ஏ.டபிள்யூ.ஜிஹாத், எம்.சஜீத் ஆகியோர் கலந்துகொண்டு, மாவட்டத்தின் பிரச்சினைகளை எடுத்துக் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .