2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

விசேட தேவையுடையோருடன் கிழக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு

அப்துல்சலாம் யாசீம்   / 2018 பெப்ரவரி 21 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு,  வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மண்முனை மேற்கு வாழ்வகம் விசேட தேவையுடையோருக்கான அமைப்பினருக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவுக்குமிடையிலான கலந்துரையாடலொன்று, ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (20) நடைபெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தங்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக நேரத்தை ஒதுக்கி தருமாறு கோரிக்கை விடுத்ததையடுத்து, ஆளுநரைச் சந்தித்து கலந்துரையாடி, தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

இக்கலந்துறையாடலின் போது, தங்களுடைய அமைப்பில் 567 அங்கத்தவர்கள் இருப்பதாகவும் விசேட தேவையுடையோருக்கான பாடசாலையொன்றும் தற்காலிக கட்டடமொன்றில் இயங்கி வருவதாகவும் ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.

அத்துடன், கிழக்கு ஆளுநருக்கு மகஜரொன்றையும் கையளித்தனர்.

இம்மகஜரில், “2007ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு  பதிவு செய்யப்பட்டு  தற்போது 567 அங்கத்தவர்களைக் கொண்டுள்ளதுடன் அவர்களது மாதாந்த சந்தாப் பணத்தில் எமது சங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

“எமது அமைப்பானது ஒரு நிரந்தர கட்டடம் கூட இல்லாமல் பல சிரமங்களுக்கு மத்தியில், தற்காலிக கட்டடத்தில், மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்காக ஒரு பாடசாலையையும் நடத்தி வருகின்றோம்.

“அச்சிறுவர்களுக்கு விளையாடுவதற்கு விளையாட்டு மைதானம் கூட இல்லாத நிலையிலேயே, கல்வியை மேற்கொண்டு வருகின்றனர்.

“வாழ்வக அமைப்பில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிரந்த வருமானம் ஈட்டக்கூடிய வகையில், சுயதொழில் வகைகளை வழங்கி, அவர்களது வாழ்க்கை முன்னேற்றமடையச்செய்ய நடவடிக்கை எடுக்கவும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .