2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டுக்கு ரூ.5,000 மில்.’

அப்துல்சலாம் யாசீம்   / 2017 ஜூலை 21 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்ட  விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், இதுவரை நிலையானதொரு செயற்றிட்டம் இல்லாத காரணத்தால், அவற்றை மேம்படுத்தும்  நோக்கில் 5,000 மில்லியன் ரூபாய் நிதியை, எதிர்வரும் மூன்று வருடத்துக்குள் வழங்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முதல் கட்டமாக, அதில் ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி இவ்வருடம் ஒதுக்கப்பட்டு பல்வேறு துறைசார்ந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகம், திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் ஏனைய ஜந்து அமைச்சுக்களும் இணைந்து ஏற்பாடு செய்த, தேசிய உணவு உற்பத்தி  வேலைத்திட்டத்தின் கீழ், சிறந்த தேசிய  உணவு உற்பத்தியாளர்களுக்கான  ஜனாதிபதி  விருது வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி தலைமையில், கந்தளாயில், இன்று (21) நடைபெற்றது.

அங்கு உரையாற்றிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர், அங்கு குறிப்பிட்டதாவது, "காலநிலை மாற்றம் காரணமாக நாட்டின் தேசிய பொருளாதாரம் நேரடியாகப் பாதிப்புக்கு உட்படுகிறது. பல்வேறு நாடுகளும் இதன் பாதிப்புக்கு உட்பட்டுள்ளன.

அதிக வரட்சி காரணமாக, மக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். வரட்சி காரணமாக, நாட்டின் நெல் உற்பத்தி, ஜம்பது சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வாரங்களில் பர்மா - பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்து, மக்களுக்கு அவற்றை நியாய விலையில் வழங்கவுள்ளோம். நிவாரணச் செயற்பாடுகளுடன் நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடு முன்னெடுக்கப்படும்" என, ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்நிகழ்வில், அமைச்சர்களான துமிந்த திஸாநாயக்க, தயா கமகே, மஹிந்த அமரவீர, கிராமியப் பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் அமீர் அலி, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, ஊவா மாகாண ஆளுநர் மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஹ்ரூப், கே.துரைரெட்ணசிங்கம், கிழக்கு மாகாண அமைச்சர்கள், அரச உயரதிகாரிகள், விருது பெரும் விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .