2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வீதிகள் மறுசீரமைப்பு

அப்துல்சலாம் யாசீம்   / 2018 பெப்ரவரி 16 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

கிழக்கு மாகாணத்திலுள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும்  கிழக்கு மாகாண வீதி  அபிவிருத்தி திணைக்களத்தின்  கீழ் உள்ள வீதிகளை புனரமைப்பு  செய்வது தொடர்பான கலந்துரையாடல் நேற்று  (15)  கிழக்கு மாகாண ஆளுநர்  செயலகத்தில்,

ஆளுநர்  ரோஹித போகொல்லாகம   தலைமையில் நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை,   மட்டக்களப்பு,  திருகோணமலை, மாவட்டங்களிலுள்ள மிக முக்கிய வீதிகள் புனரமைக்கப்படவுள்ளதாகவும், அவ்வீதிகளை மிக விரைவாக புனரமைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்த வேளை தெரிவித்ததாகவும், ஆளுநர் தெரிவித்தார்.

இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏ 15 வீதி  மறுசீரமைப்பு ,மட்டக்களப்பு  திருகோணமலை வீதி பாலம் மீள் புனரமைப்பு,செங்கலடி  தொடக்கம் மஹாஓயா வீதி புனரமைப்பு     மட்டக்களப்பு நகரத்திலுள்ள  வெளிச்சவீடு  வீதியினை அகலமாக்குதல், பட்டி வீதி தொடக்கம் மாமாங்கம் கோயில் வீதியினை அகலப்படுத்தல், களுதாவளை கடல் வீதியிலிருந்து பொருளாதார நிலையம் வரையிலான வீதியை அகலமாக்கல் போன்ற பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .