2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’வெளிமாவட்டத்தினரால் வளங்கள் அபகரிக்கப்படுகின்றன’

Suganthini Ratnam   / 2017 ஜூன் 20 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன் ஆனந்தம்

திருகோணமலை மாவட்டத்திலுள்ள வளங்கள், வெளி மாவட்டத்தினரால் அபகரிக்கப்பட்டு வருகின்றன. இதனால், மக்களின் விவசாயம் மற்றும் பொருளாதாரமும் பாதிக்கப்படுகின்றன என, கிழக்கு மகாணசபை உறுப்பினர்  ஜே.எம்.லாகீர் தெரிவித்தார்.

மூதூர், கிண்ணியா, கல்லாறு போன்ற இடங்களில் மகாவலிக்கரையில் இடம்பெறும் மண் அகழ்வு இங்குள்ள வளங்கள் அழிக்கப்படுகின்றமைக்கு காரணமாக அமைந்துள்ளது எனவும் அவர் கூறினார்.

கிழக்கு மாகாணசபை அமர்வு, இன்று நடைபெற்றபோது, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் விசேட பிரேரணையை முன்வைத்தார்.  

இந்த விசேட பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு  மகாணசபை உறுப்பினர்  ஜே.எம்.லாகீர் உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'திருகோணமலை மாவட்டக் கச்சேரி கனியவளப்பிரிவு, கந்தளாயிலுள்ள கனியவளப்பிரிவு, குருநாகலிலுள்ள கனியவளப்பிரிவு ஆகியற்றின் மூலம்; நூற்றுக்கணக்கானவர்களுக்கு மண் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுகின்றன. இதனால், தினமும் நூற்றுக்கணக்கான லொறிகளில் மண் அகழ்ந்து கொண்டு செல்லப்பட்ட வண்ணமுள்ளன. இதனால் எமது  பகுதிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன' என்றார்.

'ஏனைய மாவட்டங்களில் இவ்வாறான வளங்கள் இருந்தபோதும், அம்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எமது மாவட்டத்துக்கு வந்து இந்த மண் அகழ்வில் ஈடுபடுகின்றனர்.

எமது பகுதிகளில் மண் அகழ்ந்துசென்று,  கொழும்பு போன்ற இடங்களில் ஒரு லொறி மண் 80 ஆயிரம் ரூபாய்;வரை விற்பனை செய்யப்படுகின்றது. எனவே, எமது பகுதிகளில் இடம்பெறும்  மண் அகழ்வானது முற்றாகத் தடை செய்யப்பட வேண்டும் என்பதுடன், இந்த விடயம் தொடர்பில் உரிய தரப்பினர் கவனம் செலுத்த வேண்டும்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .