2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை

Editorial   / 2018 நவம்பர் 15 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை மாவட்டத்தில் அண்மைக் காலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலர் உணவுப்பொருட்களை நிவாரணமாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் கே.சுகுணதாஸ் தெரிவித்தார்.

நிவாரண நடவடிக்கைகளை, உரிய பிரதேச செயலாளர்களுக்கு மதிப்பீடு செய்து, அறிக்கைகளை விரைவாக சமர்ப்பிக்குமாறும் பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கூறிய அவர், வெள்ள அனர்த்தம் மூலமாக திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா, மூதூர், சேருவில, தம்பலகாமம் போன்ற பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என, சுட்டிக்காட்டினர்.

அத்துடன், இவர்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்காக குறித்த பிரதேச செயலாளர்களுக்குப் பாதிப்புத் தொடர்பான அறிக்கைகளை அனுப்பி வைக்குமாறு கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

உரியவாறு தகவல்கள் கிடைக்கப் பெற்றதும், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக அதற்கான நிதியைப் பெற்றுக் கொடுத்து, நிவாரணங்களை வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .