2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஹஜ், உம்றா கடமை தொடர்பில் கலந்துரையாடல்

எப். முபாரக்   / 2018 டிசெம்பர் 01 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஜ், உம்றா கடமைகளுக்காக யாத்திரிகர்களை அழைத்துச் செல்வதிலுள்ள பிரச்சினைகள், உம்றா கடமைக்கான விமான பயனச்சீட்டுக்கட்டுகளை பெற்றுக்கொள்வதில் உள்ள சவால்கள் குறித்தும் முஸ்லிம் அலுவல்களுக்கு பொறுப்பான நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுடன் இலங்கை ஹஜ் பிரயாண முகவர்கள் சங்கம் நேற்று (30) விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

பத்தரமுல்லை, பெலவத்தையில் அமைந்துள்ள லக்திய மெதுரவில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில், ஹஜ், உம்றா கடமைகளுக்காக யாத்திரிகர்களை அழைத்துச் செல்வதிலுள்ள பிரச்சினைகள் தொடர்பில், மகஜர் ஒன்றும் இதன்போது, அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம் கையளிக்கப்பட்டது.

எதிர்காலத்தில் ஹஜ், உம்றா கடமைகளை  நிறைவேற்றுவதிலுள்ள பிரச்சினைகளுக்கு, தீர்வினைப் பெற்றுத் தருவதாக இதன்போது உறுதியளித்த அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், இது குறித்து இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவருடன் கலந்துரையாடி, விரைவில் தீர்வினைப் பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.

இக்கலந்துரையாடலில் இலங்கை ஹஜ் பிரயாண முகவர்கள் சங்கத்தின் தலைவர், உப தலைவர்கள், எனப் பலரும் கலந்துக் கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X