2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நாகானந்த சர்வதேச பௌத்த ​பல்கலைக்கழக வெசாக் நிகழ்வில் ஜனாதிபதி

Gavitha   / 2017 மே 13 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மானெல்வத்த நாகானந்த சர்வதேச பௌத்த பல்கலைக்கழகத்தின் வெசாக் புண்ணிய நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதம அதிதியாக இன்று (13) கலந்துக்கொண்டார்.

புத்த பெருமானின் மூன்று முக்கிய புண்ணிய நிகழ்வுகளை அனுஷ்டிக்கும் ஸ்ரீ நாகானந்த சர்வதேச பௌத்த வெசாக் புண்ணிய நிகழ்வு, மானெல்வத்த நாகானந்த சர்வதேச பௌத்த பல்கலைக்கழகத்தில், சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வின் இரண்டாம் நாளான இன்று காலை, விஹாரைக்குச் சென்ற ஜனாதிபதி,  முதலில் சமய நிகழ்வுகளில் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, “பணம் மற்றும் அதிகாரத்தின் பின்னால் இழுபட்டுச் செல்லும் சமூகம், மனிதனின் நற்பண்புகளை பின்னடையச் செய்துள்ளது. எனவே இத்தகைய சர்வதேச பௌத்த நிலையங்கள் மேற்கொண்டு வரும் பணி பாராட்டத்தக்கது” என குறிப்பிட்டார்.

நாகானந்த சர்வதேச பௌத்த பல்கலைக்கழகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி போதாகம சந்திம தேரர் மற்றும் தாய்லாந்தின் மகா சூலாலோன்கோன், பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் தர்மகோஷா ஜான் தேரர்களினால் அனுசாசன உரை நிகழ்த்தப்பட்டது.

பேராசிரியர் சங்கைக்குரிய தீகல்லே மஹிந்த தேரர் மற்றும் கலாநிதி காமினி காரியவசம் ஆகியோரினால் எழுதப்பட்டுள்ள பௌத்த நூல், ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

மேலும், நிகழ்வுக்கு வருகை தந்திருந்த வெளிநாட்டு தேரர்களினால், ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .