2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

யானைகளுக்காக ஒதுக்கப்பட்ட வனப்பகுதி அழிப்பு

Editorial   / 2017 நவம்பர் 22 , மு.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டையில் காட்டு யானைகளை முகாமைத்துவம் செய்வதற்காக ஒதுக்கப்பட்ட காடுகள் தற்போது அழிவடைந்து வருகின்றன என, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

காட்டு யானைகளை முகாமைத்துவம் செய்வதற்கான பகுதி ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், சட்டபூர்வமாக வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு, வர்த்தமானி அறிவித்தலில் இந்த ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக, சட்டவிரோதமான முறையில் பாரியளவில் காடுகள் அழிக்கப்பட்டு வருவதாகவும், விலங்குகளை சிலர் வேட்டையாடி வருகின்ற நிலையும் காணப்படுவதாகவும், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்,  காடுகள் அழிக்கப்பட்டு புதிய அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுவதுடன், சிலர் விவசாய நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை பகுதியில் அண்மைக்காலங்களாக காட்டு யானைகளின் அச்சுறுத்தல் நிலவி வருவதுடன், இவ்வாறு காடுகள் முறையற்ற விதத்தில் அழிக்கப்பட்டு வேறு பல அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படும் போது, காட்டு யானைகளைப் பாதுகாப்பது குறித்து முன்வைக்கப்பட்ட முகாமைத்துவத் திட்டத்தை உரிய முறையில் மேற்கொள்ள முடியாத நி​லை காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இவ்வாறான சம்பவங்கள் மேலும் பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X