2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

20 ஆவது திருத்தத்தை ஜே.வி.பி கையளித்தது

Editorial   / 2018 மே 25 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்த உள்ளிட்ட திருத்தங்கள் அடங்கிய, அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தை ஜே.வி.பிஇ இன்று (25) கையளித்துள்ளது.

தனிநபர் பிரேரணையாகவே, ஜே.வி.பியின் தலைவரும், எதிர்க் கட்சி முதற்கோலாசானுமாகிய அநுரகுமார திஸாநாயக்க, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக திஸாநாயக்கவிடம் கையளித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக, இதற்கு முன்னர் ஆட்சிபீடமேறிய சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகிய முன்னாள் ஜனாதிபதிகள் இருவரும், 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 ஆம் திகதியன்று ஆட்சிபீடமேறிய தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், உறுதியளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X