2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

3ஆவது அலை குறித்து ’வீண் அச்சம் வேண்டாம்’

Kogilavani   / 2021 ஏப்ரல் 21 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகேஸ்வரி விஜயனந்தன்

சித்திரைப் புத்தாண்டு பண்டிகைக் காலம் ஆரம்பிப்பதற்கு முன்னரே, கொரோனா தொற்று பரவல் குறித்து சுகாதாரத் தரப்பினர் எச்சரிக்கை விடுத்திருந்ததுடன், சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இருப்பினும், பலர் அதனைப் பின்பற்றாமை கவலை தரும் விடயமெனக் கூறிய அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான டொக்டர் ரமேஸ் பத்திரன, எவ்வாறெனினும், கொரோனா தொற்றின் 3ஆவது அலை குறித்து வீண் அச்சங்கொள்ளத் தேவையில்லை என்றார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு தொடர்ந்துரைத்த அவர், சுகாதாரத் தரப்பினர் உள்ளிட்ட அனைவரும், 3ஆவது அலை குறித்து அவதானத்துடன் இருக்கின்றனர் என்றும் அவ்வாறு மூன்றாவது அலை உருவானால் அதனையும் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

கொரோ வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான இரண்டாவது தடுப்பூசியை ஏற்றுவதற்கான தடுப்பூசிகள், அரசாங்கத்திடம் கைவசம் இருப்பதாகவும் தெரிவித்த அமைச்சர், முறையான திட்டமிடலுடன், இம்மாதம் 29ஆம் திகதி முதல், இந்தத் தடுப்பூசி ஏற்றல் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .