2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

‘4,000 சிங்கள தாய்களுக்கு கருத்தரிக்காமலிருக்க முடிச்சு’

Editorial   / 2019 மே 24 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கள, பௌத்தத் தாய்மார்கள் 4,000க்கும் மேற்பட்டோருக்குக் கருவுறாமைச் செய்தார் எனக் கூறப்படும் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் வைத்தியர் யார்? வைத்தியசாலைகள் எங்குள்ளன எனக் கேள்வியெழுப்பிய ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, அதுதொடர்பிலான அறிக்கையை, நாடாளுமன்றத்துக்கு நாளை (இன்று) சமர்ப்பிக்குமாறு கோரிநின்றார்.

“எத்தனை சிங்களவர்களுக்கு கருவுறாமை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செய்த வைத்தியர் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது. எனினும், கருவுறாமை செய்யப்பட்ட தாய்மார்கள் எந்த பிரதேசத்தைச் ​சேர்ந்தவர்கள், எந்த வைத்தியசாலையில் இவ்வாறு அறுவைச் சிகிக்சை செய்யப்பட்டது. வைத்தியரின் விவரங்கள் வெளியாகவில்லை. ஆகையால், இது பயங்கரமானது” என்றார்.

இது, அரசாங்கத்துக்கும் பெரும் பிரச்சினையாகுமெனத் தெரிவித்த சபைமுதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல, விசாரணை அறிக்கையையும் கோரப்பட்டுள்ளது என்றார்.

​தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த வைத்தியர்களினால், கருவுறாமை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பிலும் வைத்தியர்களை கைதுசெய்வதற்காக விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளன என்றும் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிங்கள, பௌத்த தாய்மார்களின் முதலாவது பிரசவத்தின் போது, அறுவைச்சிக்சையின் மூலமாக குழந்தையை பெற்றெடுத்தார்கள் என்றால், அவ்வாறான தாய்மார்மார்களின் ப்ளோப்பியன் குழாயை, மிகவும் சூட்சுமமான முறையில், முடித்துபோட்டு, கருவுறாமை செய்துவிடுகின்றனர் என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதென அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

சந்​தேகநபரான வைத்தியர், 7,000 க்கும் மேற்பட்ட தாய்மார்களுக்கு இவ்வாறு அறுவைச்சிகிக்சை செய்துள்ளார் என்றும், அவர்களில் 4,000 தாய்மார்கள், பௌத்த- சிங்களவர்கள் என்றும் கூறப்படுகின்றது.

அந்த வைத்தியர் தொடர்பில் மிக முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன என்றும், கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் ஊடாக, மேற்படித் தகவல்கள் வெளியாகியுள்ளன என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X