2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘4 நாட்களில் மாற்றம்’

Editorial   / 2018 ஏப்ரல் 09 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர், அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுமெனத் தெரிவித்த கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய செயற்குழு, மே மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் நியமிக்கப்படுமெனவும் கூறினார்.  

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக்கூட்டமும், நாடாளுமன்றக் குழுக்கூட்டமும், கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்றது.

   இதேவேளை, ஐக்கிய ​தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, அன்றிரவு சந்தித்துக் கலந்துரையாயுள்ளனர்.  

இந்நிலையிலேயே, கொழும்பிலுள்ள தன்னுடைய உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், அமைச்சர் அகில விராஜ் காரியவசம் நேற்று (8) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார். அதன்போதே, மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.  

“ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்புப் பணிக்காக, குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவை நியமிப்பதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்றுக் குழுவின் உறுப்பினர்களைத் தவிர்ந்த ஏனைய சகல உறுப்பினர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.  

“இதன்போது நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பின்போது, அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் கயந்த கருணாதிலக்க ஆகியோரும் தெரிவாகியுள்ளனர்” என்றும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.   கட்சியின் தலைமைத்துவம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவித்த அமைச்சர், கட்சியின் தலை​வராக, ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் பதவி வகிப்பதற்கு, பெரும்பான்மை கிடைத்துள்ளது என்றார். 

இந்நிலையில், எதிர்வரும் புத்தாண்டுக்கு முன்னர், அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுமென அவர் நம்பிக்கை வெளியிட்டார்.    இதேவேளை, நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில், கடந்த 4ஆம் திகதியன்று நடத்தப்பட்ட வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோல்வியடையச் செய்வோம். அதன்பின்னர் அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவரப்படும் என நம்பிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X