2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

50 ரூபாய் கிடைக்காமைக்கு திறைசேரியின் எதிர்ப்பே காரணம்

Editorial   / 2020 ஜனவரி 25 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லாட்சி அரசாங்கம் ​தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 50 ரூபாயால் அதிகரிக்க முயற்சிகளை மேற்கொண்டிருந்தெனத் தெரிவிக்கும் அரவிந்த குமார் எம்.பி, திறைசேரி எதிர்ப்பு வெளியிட்டதாலேயே அது சாத்தியப்படாமல் போனதெனவும் தெரிவித்தார்.   

தனியார் ஊடகமொன்றுக்கு அவர் வழங்கிய நேர்க்காணல் ஒன்றில் கலந்துகொண்டு மேலும் தெரிவித்த அவர், 

மலைகய சமூகத்தை சேர்ந்த நான்கு பேர் இன்றளவில் நீதிவானகளாக உள்ளதாகவும், அதனால் மலையக சமூகம் அபிவிருத்தி அடைய முடியாத சமூகமென கூறுவதை ஒரு​போதும் ஏற்றுகொள்ள முடியாதெனவும் தெரிவித்தார். 

இருப்பினும் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத அடிப்படையில் மலையகச் சமூகம் பின்னடைவைச் சந்தித்திருப்பதாக தெரிவித்த அவர், 16 பிரதிநிதித்துவங்களை கொண்டிருக்க வேண்டிய மலையகம் 9 நாடாளுமன்ற உறுப்பினர்களை மாத்திரமே கொண்டிருப்பது கவலைக்குரியதெனவும் தெரிவித்தார்.

குறிப்பாக நுவரெலியா,பதுளை, கண்டி உள்ளிட்ட மாவட்டங்களில் மலையக மக்கள் செரிந்து வாழ்தாலும், பல மாவட்டங்களில் பரவலடைந்து வாழும் சமூகமாக மலையக சமூகம் இருப்பதாலேயே இந்நிலை காணப்படுவதாகவும், முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும்,  உரிய முயற்சிகயை மேற்கொண்டால் உள்ளூராட்சி சபைகளில் மலைகய மக்களின் பிரதிநித்துவங்களை அதிகரித்துகொள்ள முடியுமெனவும் தெரிவித்தார். 

குறிப்பாக கதிர்காமம் போன்ற பகுதிகள் சிங்கள பிரதேசங்கள் எனக் கருதப்பட்டாலும், அங்கும் 2 ஆயிரம் தமிழ் வாக்காளர்கள் இருந்தாலும் அவர்களுக்கான பிரதிநித்துவத்தை உருவாக்க முடியாத நிலைமை காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் வாழும் தமிழர்கள் பலர் அந்த சமூகத்தில் கலாசாரத்துக்குள்ளே மூல்கிவிடுகிறார்கள் எனத் தெரிவித்த அவர்,  அந்த மக்களை  தெளிவுபடுத்துவதற்கான முயற்சிகள் அவசியமெனவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் மொனராகலை மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மலையகத் தமிழர்கள் தமக்கான அரசியல் அங்கீகாரத்தை உருவாக்கிகொள்ள அச்சப்படும் நிலைமை​யே காணப்படுவதாகவும்,  புதியவர்கள் அரசியலுக்கு வரும் போது ஏனைய சமூகங்களின் எதிர்ப்பை சந்தித்துகொண்டே வரவேண்டும் என்ற நிலைமை காணப்படுவதாகவும் தெரிவித்தார். 

தேயிலைத் துறையால் நாட்டுக்கு வருமானம் இல்லை எனக் கூறப்பட்டாலும், அதனால் இன்றுவரை அரசாங்கம் பெருமளவு வருமானம் ஈட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மையெனவும் தெரிவித்த அவர், ஜனாதிபதி தனது அதிகாரங்களுக்கு அப்பால் சென்றும் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள முடியும் என்றார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .