2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அணு ஆயுதங்களின் பரம்புதலுக்கு தடை விதிப்பு

Editorial   / 2017 ஒக்டோபர் 09 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அணு, இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களின் பரம்புதல்களுக்கு,இலங்கை அரசாங்கம் தடைவித்துள்ளது.   
இது தொடர்பிலான ஒழுங்கு விதிகளை உள்ளடக்கிய அதிவிசேடமான வர்த்தமானி அறிவித்தல்,  வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பனவின் கையொப்பத்தில் வெளியிடப்பட்டுள்ளது.   

இந்த ஒழுங்குவிதிகள் 2017ஆம் ஆண்டின் ஐ.நா சபை (அணு, இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களின் பரம்புதல் தொடர்பான தடைவிதிப்புகள்) பற்றிய ஒழுங்கு விதிகள் என எடுத்துக்காட்டப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

அதனடிப்படையில், இலங்கைக்குள் அணு, இரசாயன அல்லது உயிரியல் ஆயுதங்களை, உற்பத்தி செய்திகின்ற, உடமையில் வைத்திருக்கின்ற, இடம்பெயர்கின்ற அல்லது கைமாறுகின்ற இன்றேல் பயன்படுத்துகின்​ற ஆள் அல்லது தொகுதியினருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும்.  

அவ்வாறானவர்களுக்கு, 25 ஆண்டுகளுக்குக் குறையாத சிறைத்தண்டனையும் 5 மில்லியன் ரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்படும்.  

இதேவேளை, மேற்குறிப்பிட்ட குற்றங்களுக்கு உடந்தையாகவும் நிதியளிப்பவராகவும் இருப்பவருக்கு அல்லது தொகுதியினருக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு மேற்படாத சிறைத்தண்டனையும், ஒரு மில்லியன் ரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்படும்.  

இதேவேளை, சமாதான நோக்கங்களுக்காக இலங்கையினுள் அணு, இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்கள் தொடர்பான பொருட்களை ஏற்றுமதி செய்வதில், அவற்றைக் கப்பல் மாற்றியேற்றுவதில் ஈடுபடுகின்றவர்கள் எழுத்திலான சட்டத்துக்கு இணங்கியொழுகுதல் வேண்டும் என்றும் அந்த ஒழுங்கு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடகொரியாவுக்குத் தடைவிதிப்பு  

இதேவேளை, வட கொரியா தொடர்பிலான பல்வேறான துறைகள் சார்ந்த தடைகளை விதிப்பதற்கான ஒழுங்குவிதிகள் அடங்கிய, மற்றுமோர் அதிவிசேடமான வர்த்தமானி அறிவித்தலையும் அரசாங்கம் வெளியிட்டுள்ளது.   

2017ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் சபை (ஜனநாயகக் கொரிய மக்கள் குடியரசு தொடர்பான தடைவிதிப்புகள்) பற்றிய ஒழுங்குவிதிகள் என்று குறிப்பிட்டு, வெ ளியிடப்பட்டுள்ள அந்த அதிவிசேடமான வர்த்தமானியிலும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன கையொப்பமிட்டுள்ளார்.   

ஐ.நா பாதுகாப்பு சபை தீர்மானங்களுக்கு அமையவே அரசாங்கம் வட கொரியா தொடர்பில் தடைகளை விதிக்கும் இந்த ஒழுங்குவிதிகளைக் கொண்டுவந்துள்ளது.   

இதேவேளை, இலங்கையிலுள்ள நபரொருவர் அல்லது இலங்கைக்கு வெளியேயுள்ள இலங்கை பிரஜையொருவர் வடகொரியாவுடன் மற்றும் அங்குள்ள நிறுவனங்களுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளுதல் மற்றும் அவர்களுக்கு உதவி உபகாரங்களை வழங்குதல் உள்ளிட்ட விடயங்களுக்கே தடைவிதிக்கப்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X