2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அந்த 7 நிமிடங்கள்

Editorial   / 2018 நவம்பர் 02 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில், நேற்று (01) மாலை இடம்பெற்ற சந்திப்பு, சுமார் 7 நிமிடங்கள் மாத்திரமே நீடித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அலரி மாளிகையில் நேற்று மாலை 4.10க்கு ஆரம்பமான இந்த சந்திப்பு, 4.17 வரை நீடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

முற்றும் தனிப்பட்ட சந்திப்பாகக் காணப்பட்ட இந்தச் சந்திப்பில், அவர்கள் இருவர் மாத்திரமே இடம்பெற்றிருந்ததாகவும் முன்னாள் பிரதமரின் அழைப்புக்கேற்பவே, இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேபோன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் அறிவுறுத்தலுக்கமைய, தற்போதைய புதிய அரசாங்கத்துக்கு, பெரும்பான்மை பலம் இருக்கின்ற விடயம் தொடர்பிலும், கோட்டாபய ராஜபக்ஷவினால், ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், தனக்கு நாடாளுமன்றத்தில் அதிக பெரும்பான்மை உள்ளதாகத் தெரிவித்துள்ளாரெனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு மற்றும் அலரி மாளிகையிலிருந்து அவர் வெ ளியேறும் பட்சத்தில் அவருக்குக் கொடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு தொடர்பிலும், இதன்போது பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X