2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘இனவாதம், கலவரம் வேண்டாம்’

Editorial   / 2018 மார்ச் 09 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இனவாதச் செயற்பாடுகளை முன்னெடுத்து, நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தி, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் வகையில் செயற்பட வேண்டாம் என, சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.  

ஊடகங்களுக்கு நேற்று (08) விடுத்துள்ள அறிக்கையிலே, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.  

சபாநாயகர் அலுவலகத்தால் விடுக்கப்பட்டுள்ள குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.  

“இரண்டு வருடங்களுக்கு முன்னர் சகல இன மக்களும் ஒன்றிணைந்து நாட்டில் வர்க்க வேறுபாடுகளைக் கலைந்து, சமாதானத்துடன்,  சிறந்த நாட்டைக் கட்டியெழுப்பும் பொருட்டு ஒருமித்து வாக்களித்தனர்.  

“30 வருடகால யுத்தத்தை மறந்து, இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும் செயற்பட்டதைக் கண்டு உலக நாடுகளில் உள்ள இலங்கையர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.  

“2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி மாற்றத்தை நிலைநாட்டிய இலங்கையர்களுக்கு, இது ஒன்றும் புதிதல்ல. இலங்கையில் வாழும் சகல குடிமக்களுக்கும் சமமான வகையில் அரசமைப்பின் அடிப்படையில் அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.  

“நீண்ட காலமாக ஒற்றுமையுடனும் ஐக்கியத்துடனும் வாழ்ந்த மக்கள் இடையே பிரிவினையைத் தோற்றுவித்து, இவ்வாறு செயற்படுவதானது, நாட்டைப் பிளவுபடுத்த எண்ணுபவர்களின் செயற்பாடேயாகும்.  

“நாட்டில் அண்மைக்காலங்களாக ​இடம்பெற்று வரும் வன்முறைச் செயற்பாடுகள் இதனையே கூறிகின்றன. இவ்வாறான செற்பாடு, 2014ஆம் ஆண்டிலும் இடம்பெற்றது.  

“இலங்கையர்களைப் பிளவுபடுத்த எண்ணுபவர்களுக்கு எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டும்” என, அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .