2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் குறைப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 21 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

2019ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான இடைக்காலக் கணக்கறிக்கை, நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால், நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து, நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எரிபொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டு உள்ளதாகக் கூறினார்.

அந்த வகையில், பெற்றோல் மற்றும் சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 10 ரூபாயாலும் ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 5 ரூபாயாலும் குறைக்கப்படவுள்ளதாக, பிரதமர் அறிவித்தார்.

இன்று (21) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ள இந்த எரிபொருட்களின் புதிய விலைப் பட்டியல் பின்வருமாறு,

எரிபொருள் வகை

(ஒரு லீற்றர்)

குறைக்கப்பட்ட தொகை (ரூபாய்)

புதிய விலை (ரூபாய்)

92 ஒக்டேன் ரக பெற்றோல்

10.00

125.00

95  ஒக்டேன் ரக பெற்றோல்

10.00

149

ஒட்டோ டீசல்

05.00

101.00

சுப்பர் டீசல்

10.00

121.00

 

இந்நிலையில், அரசாங்கத்தின் விலைச் சூத்திரத்துக்கு அமைய, எரிபொருட்களின் விலைகள், இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக, திறைசேரித் தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .