2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இயற்கை அனர்த்தங்களினால் பாரிய பாதிப்பு

Editorial   / 2017 நவம்பர் 30 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் நேற்றிவு முதல் நிலவிய மோசமான வானிலையால் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

மரங்கள் முறிந்து விழுந்தமையால் இதுவரையில் இருவர் பலியாகியுள்ளனர். வள்ளம் கவிழ்ந்ததில் ஒருவர் பலியாகியுள்ளார்.

இதேவேளை, இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட 15 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோசமான வானிலையை அடுத்து, மத்திய, ஊவா, சப்ரகமுவ, தென் மற்றும் மேல் ஆகிய மாகாணங்களில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இன்றையதினம் நடத்தவிருந்த இறுதித்தவணைப் பரீட்சைகளை பிரிதொரு தினத்தில் நடத்துமாறு கல்வியமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

இதேவேளை, களனிவெளி, கரையோர மற்றும் மலையகத்துக்கான ரயில் ​சேவைகள் யாவும் பாதிக்கப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவேண்டிய, விமானங்களில் சில, மத்தலை விமான நிலையத்துக்கு திருப்பியனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இந்த மோசமான வானிலையை அடுத்து, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் பிறப்பிக்கப்பட்டிருந்த சிவப்பு எச்சரிக்கை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் அறிவித்துள்ளது.

இதேவேளை, பல பிரதேசங்களுக்கும் மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X