2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு பேதமின்றி தண்டனை’

Editorial   / 2018 ஜனவரி 19 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நாட்டில், இலஞ்சம் மற்றும் ஊழலை தடுப்பதற்காகவே ஆட்சியமைத்தோம். ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு, கட்சி பேதமின்றி தண்டனை வழங்கப்படும்” என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பிரதமர் ரணில்நாட்டு மக்களுக்கு, நேற்றிரவு ஆற்றிய சிறப்புரையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தனதுரையில், ஆட்சிக்கு வந்து சில காலங்களி​​ல் பிணை முறி விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. நாம் அதனை மூடி மறைக்கவில்லை.

இரண்டே  வாரங்களில் அது தொடர்பில் ஆராய ஆணைக்குழு ஒன்றை நியமித்தோம்.  விசாரணைக்காலப்பகுதியில் மத்திய வங்கி ஆளுநர் பதவி துறந்தார். நாடாளுமன்றத்துக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்றத்துக்கு தேவைப்படின் செயற்குழு ஒன்றை நியமிக்குமாறு நான் அறிவித்தேன். ஆணைக்குழு அறிக்கை அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

கடந்த காலங்களில் கோப் குழு தலைவராக அரசாங்கத்தரப்பில் உள்ள ஒருவரே நியமிக்கப்பட்டார். தற்போதைய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியை  சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கே தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.  குறித்த குழுவானது முறிகள் விநியோகம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தது. இந்த அறிக்கையும்  நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன். குறித்த அறிக்கை மீதான விவாதமும் நடத்தப்பட்டது.

இந்த அறிக்கை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு கடந்த 2016 ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி அது சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதன்போது பெர்பச்சுவர்ஸ் ட்ரஸரிஸ் நிறுவனம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோப் குழு அறிவித்தது.  அதற்கமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, என்னுடன் கலந்தரையாடி பின்னர் ஆணைக்குழுவை அமைத்தார்.

குறித்த ஆணைக்குழுவுக்கு நாம் ஒத்துழைப்புகளை வழங்கினோம்.  நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆணைக்குழுவுக்கு சென்றிருந்தனர். நானும் சென்றிருந்தேன்.

குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்ட உடன் இவ்வாறு எந்த ஒரு அரசாங்கமும் விரைந்து செயற்படவில்லை. மத்திய வங்கி பிணை மு விநியோகம் தொடர்பில்  மூன்று தடவைகள் ஆராய்ந்தோம்.

கடந்த அரசாங்க காலத்தில் பல தடவைகள் இவ்வாறான முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும் அவை தொடர்பில் எந்த விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய நேரத்தை தவிற வேறு சந்தர்ப்பங்களில்  அதற்கான பதில் வழங்கப்படவில்லை.

இலங்கையில் நிதி கட்டுப்பாடு நாடாளுமன்றத்திடமே உள்ளது.  அன்று நாடாளுமன்றத்தில் இந்த அதிகாரத்தை மறந்திருந்தனர்.

அவ்வாறான நிலையில்  மீண்டும் நிதி கட்டு்பாட்டு அதிகாரத்தை நாடாளுமன்றத்திடம் இருக்க   வேண்டும் எனட்பதனை உறுதிசெய்யவே கோப் குழுவுக்கும் நாடாளுமன்றத்துக்கும் இந்த பொறுப்பை கையளித்​தோம். அந்த பொறுப்பை அங்கிருந்த நீக்கிவிட முடியாது.  நாடாளுமன்றத்தில் குறித்த பொறுப்பை தவறாக பயன்படுத்தியிருந்தமையை பிணை முறி விவகாரத்தினூடாக காண முடிந்தது. அரசாங்கம் விழிப்புடன் உள்ளதென்பதற்கு இது சிறந்த உதாரணம்.

பிணை முறியினால் பெர்பச்சுவர்ஸ் ட்ரஸரிஸ் நிறுவனம் 9.2 பில்லியனை வருமானமாக பெற்றுள்ளதாக ஆணைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கொள்ளைகள் அமைச்சின் கீழ் மத்திய வங்கி இதுவரை 12 பில்லியனை தடுத்துவைத்துள்ளது.  இதனால் ஆணைகுழுவின பரிந்துரையின் படி 9.2 பில்லியனை மீள பெற்றுக்கொள்ள முடியும். நாம் அது தொடர்பில் ஆணைக்குழுவின பரிந்துரைகளையே நாம் பின்பற்றுகி்ன்றோம். இதற்கமைய குறித்த மொத்த தொகையினையும் அரசாங்கம் மீளப் பெற்றுக்கொள்ள முடியம். இதனால் அரசாங்கத்துக்கு எந்த நட்டமும் ஏற்படபோவதில்லை.

அத்துடன் குறித்த மோசடியுடன் தொடர்புடையவர்கள எவராயினும்  அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.  பிணைமுறி விவகாரம் தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட சந்தர்ப்பத்திலிருந்து அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான பூரண ஒத்துழைப்புகளை வழங்கினோம். இதனால் எமது அரசாங்கம் ஒழுக்கமான, கௌரவமான, நியாயமான அரசாங்கம் என்பதனை எங்களால் நிரூபிக்க முடிந்தது.

கடந்த காலத்தில் இவ்வாறு அரசாங்கம் செயற்பட்டதனை நாங்கள காணவில்லை.  எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள சிலர் பராம்பரியத்தை மீறியமை தொடர்பில் இராஜிநாமா செய்தனர். சட்டம் நி்லைநாட்டப்பட்டது. ​விரல் நீண்ட முடியாத அளவுக்கு நீதிமன்றம் தீர்ப்புகளை வழங்கியது. மக்கள் சுதந்திரமாக கருத்துக்களை வெ ளியிட்டனர். வெகுஜனங்கள் பயமின்றி செயற்பட்டன.

அதுமட்டுமல்ல. பிணை முறி அறிக்கையில்  குற்றவளிகளாக குறிப்பிடப்படட்டவர்கள எமது கட்சியிலும் இருப்பார்களாயின், அது தொடர்பில ஆராய்ந்து  தீர்மானம் மேற்கொள்ளும் பொருட்டு திலக் மாரப்பன தலைமையில் குழுவொன்றை அமைத்துள்ளோம். குறித்த குழுவின் பரிந்துரைக்கமைய ​நாம் செயற்படுவோம்.

இது ​ஐக்கிய தேசியக் கட்சியின் பாரம்பரியம். எமது கட்சியின் பாரம்பரியத்துடனும் நல்லாட்சி எண்ணக்கருவிற்கமையவும் அரசாங்கத்தை கட்டியெழுப்புவோம். கிராமங்களை கட்டியெ”ழுப்புவோம்.  சபீட்சமான நாளையை உருவாக்குவோம்.

ஜனவரி 8 ஆம் திகதி நாட்டு மக்கள்  எதிர்பார்த்த மாற்றம் காரணமாக வலமான சமூகத்தை கட்டியெழுப்புவோம். இது ஒரு நாளில் ஒ்ரு இரவில் செய்ய மு​டிந்த காரியமல்ல.  நாம் எதிர்காலத்தையும், தற்போதைய நிலையினை கருத்திற் கொண்டுமே செயலாற்றி வருகிறோம். நாம் சரியான பாதையில் முன்நோக்கி பயணிப்போம். தவறுகளை திருத்துவோம். குறைகளை திருத்தி பயணிப்போம்.

பிணை முறி தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட நாள் முதல் இதுவரை நாம் மேற்கொண்ட முயற்சிகள்நாம் சிறந்த ஆரம்பத்தை எகொண்டுவந்துள்ளமையை எடுத்துக்காட்டுகிறது.

கடந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பாக மாத்திரம் நாம் ஆராயவில்லை.  தற்போது இடம்பெற்றுவரும் மொசடிகள் தொடர்பாகவும் ஆராந்து பார்ப்போம். இது தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்து உரிய நடவடிக்கையினையும் மெற்கொள்வோம்.

எமது நாட்டுக்கு சிறந்ததோர் எதிர்காலத்தை உருவாக்குவதும், பொருளாதார பலமிக்க நாடாக இலங்கையை  உருவாக்கவதுமே எமது நோக்கம்.

 இந்த இலக்கை வெற்றிக்கொள்ள நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். சவால்களை வெற்றிக்கொள்ள வேண்டும்.  பலம்மிக்க இலங்கையை கட்டியெழுப்புவோம் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .